காதலின் மீதியோ நீ-9

காதலின் மீதியோ நீ-9

காதலின் மீதியோ நீ-9

நித்ராவோடு பதினைந்து நாட்களும் ஆயுஷ் போனில் பேசிக்கொண்டுதானிருந்தான். அவன் அபிசியலாகத்தான் பேசுகிறான் என்று மோகனும் மித்ராவும் நினைத்துக்கொண்டனர்.

ஆனால் அவன் இடையிடையே அவளோடு சில நேரங்களில் தனது எண்ணத்தையும் சேர்த்துதான் பேசியிருந்தான்.

திடீரென்று முத்த ஸ்மைலி போட்டுவிட்டு அவள் பார்த்து ஷாக்கானதும் அழித்துவிடுவான்.

நித்ராவோ இவன் வேணும்னேதான் விளையாடுறான். அன்னைக்கு முத்தம் கொடுத்தை மனசுல வைச்சுத்தான் இப்படிப் பண்றான் என்று எல்லாமே தெரிந்திருந்தும் அவனது எண்ணப்போக்கு எப்படி என்று தெரியாமலும் கணிக்க முடியாமலும் தன்னைதானே குழப்பிக் கொண்டிருந்தாள்.

அவள் ஆன்லைனில் இல்லையென்றால் ஆஃப்லைனில் வந்து நேரடியாக அவளோடு பேச ஆரம்பித்திருந்தான்.

சாப்டியா? என்ன பண்ற? கால் வலிக்குதா? வொர்க் பண்ணிட்டிருக்கியா? எங்கிட்ட பேச முடியுமா? என்று நிறைய அடுக்கடுக்கான கேள்விகளை கேட்பான்.

அப்படியே உன்ன பாக்கணும் போல இருக்கு. இப்படியே பேசிட்டு இருக்க முடியாது. உன்ன நேர்ல பார்க்கணும்னு தோணுது என்றும் இடை இடையே சில பிட்டையும் போட்டிருந்தான்.

இதுல நான் எதுக்கு பதில் சொல்ல? என்று அவள் குழம்பிக் கொண்டிருக்கும் பொழுது அன்று அவள் அனுப்பிய வேலை விஷயத்திற்கு தாவி விடுவான்.

அவளக்கு தான் என்ன கொடுக்க நினைக்கிறானோ அதை நாசுக்காகக் கொடுத்து விடுவதில் வல்லவனாக இருந்தான் அந்த ஆயுஷ் குப்தா!

இதை யோசித்தே அவள் மூளைக்கு குழம்பி ஒருமாதிரியாகிவிடுவாள்.

அவள் சோர்ந்திருப்பதற்குக் காரணம் கால்வலிதான் என்று குடும்பத்தார் நினைத்திருக்க இல்லை அதற்கு காரணம் அவளுக்கு மட்டும்தானே தெரியும் .

ஆனால் அது சரியில்லை என்று தனக்கு தானே கட்டுப்பாடு போட்டுக்கொண்டு அவனிடம் எந்த எல்லைக்கு இருக்க வேண்டுமோ அந்த எல்லைக்குள்தான் பேச்சில் ஒரு எல்லையோடு நின்றிருந்தாள்.

பதினைந்து நாள் கழித்து அவளது கால் சரியானதும் கட்டெல்லாம் பிரித்துவிட்டு ஆபிஸிற்க்கு போகலாம் என்று ஓரளவு உடல் நலம் தேறியிருந்ததால் குடும்பம் மொத்தமாக முடிவெடுத்திருந்தனர்.

ஆயூஷ் நித்ராவோடு போனிலே பேசி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று இன்னும் குப்தாவுக்குத் தெரியாது.

அது தெரியும்போது கண்டிப்பாக குப்தா குடும்பத்தில் மட்டுமல்ல நித்ராக் குடும்பத்திலும் பூகம்பம் ஏற்படுவது உறுதி!

மோகன் நித்ராவை அழைத்துக்கொண்டு ஆபிஸிற்கு வந்தவன் அவளை விட்டுவிட்டு தனது கேபினுக்குள் போய்விட்டான்.

அவனே வேலையென்று வந்துவிட்டால் சின்சியரான வெள்ளைகார சிகாமணி. அதனால் ஆபிஸிற்குள் நுழைந்தால் மச்சினிச்சியும் இல்லை மரச்சீனி கிழங்குமில்லை என்ற ரீதியில் வேலையில் தலையைக் கொடுத்துவிடுவான்.

நித்ரா நிதானமாக நடந்துவந்து தனது கேபினுள் நுழையவும் அவளது டேபிளில் வாழ்த்து அட்டையோடு பொக்கே இருந்தது.

அதைப்பார்த்ததும் யாரு வைத்திருப்பாங்க என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. அதையெடுத்து கையில் சிறிது நேரம் வைத்திருந்தவள் தன்னைத்தானே மீட்டுக்கொண்டு அதை அப்படியே அந்த இடத்துலயே வைத்துவிட்டாள்.

அவளோடு சேர்த்து அந்தக் கேபினுள் நான்கு சிவில் இன்ஞ்சினியர்கள் இருக்கிறார்கள். அது யார் வைத்தது என்று யாருமே பார்க்கவுமில்லை, அதனால் யார் வைத்தது என்று தெரியாதுதான்.

நித்ராவுக்கு மட்டும் அது அனுமானமாக ஆயுஷ்தான் வைத்திருக்கக்கூடும் என்று தெரிந்திருந்தது.

ஆனாலும் தனது வேலையை செய்யத் தொடங்கியவளுக்கு நேரம் எப்படிப் போதென்றே தெரியாது. லன்ச் டைமே வந்துவிட்டது.

அதுவரைக்கும் அவளது போனில் ஆயுஷிடமிருந்து ஒரு போன்காலோ ஒத்தை மெசேஜோ எதுவுமே வரவில்லை.

அவளது போனை மட்டும் அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருத்தவளுக்கே மூளை வேலைநிறுத்தம் செய்தது.

என்ன இந்த சார் ஆபிஸுக்குள்ள வந்ததும் என்னை மறந்துட்டாரோ? ஒரு ஹாய்கூட அனுப்பலையே! என்று யோசனையில் இப்போது சாப்பிட உட்கார்ந்தாள்.

அவளது டீமோடுதான் இன்று சாப்பிட உட்கார்ந்தாள்.அதனால் அமைதியாக போனைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஏனோ மனம் சுணங்கியது.

‘அப்போ எல்லாம் வேலைக்காகத்தான் இளிச்சு இளிச்சு அந்த வெள்ளக்கரடி பேசிச்சா? உண்மையான அன்போடு இல்லையா? என்று நினைத்தவளது மனசாட்சியோ அடியே வெட்கங்கெட்டவளே. அவன் உன்னை அன்னைக்கு எவ்வளவு கேவலமாகப் பேசினான்? எவ்வளவுகெவ்வளவு கேவலமாக நடத்தினான்.இதெல்லாம் மறந்துட்டியா?அவனே ல்டேட்டஸ் பைத்தியம் உன்னை அக்லி சாக்லேட்டுன்னு சொன்னவன். அவன் போய் உன்னை தேடிவந்து அன்புக்காட்டுவானா? நீயா எதையாவது கற்பனைப் பண்ணிக்கிட்டு கண்டதையும் நினைச்சு ஏங்காதே!’ என்று ஊசியாக வலிக்கக் குத்திக்காட்டியது.

அதனால் நித்ரா மெதுவாக யோசனையோடு சாப்பிட்டு முடிப்பதற்குள் அவளோடு சாப்பிட்டவர்கள் சென்றுவிட்டனர்.

நித்ரா மெதுவாக எழுந்து கை கழுவிவிட்டு யோசனையோடு நடந்து வந்தாள்.

அவள் முன்பு யாரோ வழியை மறித்து நிற்கவும் ப்ச்ச் யாராது என்று கேட்டு எரிச்சலோடு நிமிர்ந்துப் பார்த்தாள்.அங்கே ஆயுஷ் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அவளது கண்களில் மின்னல் தெறிக்க பார்த்தாள்.

அவனோ எந்தவிதமான உணர்வுகளும் இல்லாது அவளைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு தனது அறைக்குள் விருட்டென்று நுழைந்துவிட்டான்.

‘ஏன் இப்படிப் போறான்? எதுக்கு என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரியே போறான்? பெரிய இவன் போடா டேய். நீ பார்த்தாலும் இனி நான் பார்க்கமாட்டேன். உன் பணத்திமிரையும் ஸ்டேட்டஸையும் உன்னோடுக் கூடவே வைச்சுக்க என்கிட்டக் காண்பிக்காத? வாட்ஸப்ல பெரிய நல்லவன் மாதிரியே பேசின? இப்போ மறுபடியும் ஸ்டேட்டஸ் பைத்தியம் முருங்கை மரம் ஏறிட்டோ?’என்று அவனை எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கிறளவுக்குக் கோபத்தோடு திட்டிக் கொண்டே உள்ளே வந்தாள்.

இந்த வெள்ளக்கரடியைப்போய் தேடினேன் பாரு என்னை செருப்பால அடிச்சுக்கணும். இந்த பதினைஞ்சு நாளில அவன் பேசுவதை வைத்து கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்னு நினைச்சிட்டேன் 

இப்படிபோய் இவனுக்காக நீ நிறைய யோசிச்சுட்டியே. அதையெல்லாம் ரப்பர் வைச்சு அழிச்சிடு நித்ரா.

ஆனா இவனெல்லாம் எப்போவும் மாற மாட்டான்.இந்த ஸ்டேட்டஸ் பைத்தியம் என்னைக்கும் மாறப் போறதில்ல. அவன் எப்பவும் நம்மளை மதிக்கப் போறதில்வை. அதனால் அவனைப் பத்தி யோசிக்கிறத இத்தோடு நிறுத்திக்கோ இது எல்லாம் கற்பனையிலதான் நம்ம நடக்குறமாதிரி நினைச்சுக்கணும். விடுவிடு என்று தன்னைத்தானே மனதளவில் கொட்டிக் கொண்டு தனது வேலையில் கவனம் வைத்தாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே ப்யூன் கோவிந்த் வந்து அவளருகில் நின்றான்.

மேடம் உங்கள சார் கூப்பிடுறாங்க என்று தகவலை மட்டும் சொன்னவன் அது பாட்டுக்கு சென்று விட்டான்.

என்னையவா? சார் எதுக்கு என்னைக் கூப்பிடுறாங்க? எந்த சார்னுவேற சொல்லலையே என்று சிறிது யோசித்து நின்றவள் போகாது மறுபடியும் தனது வேலையைத் தொடர்ந்தாள்.

கோவிந்த் மீண்டும் வந்தான் அவனது முகத்தில் கொஞ்சம் எரிச்சலும் கோபம் இருந்தது. அவளருகில் வந்தவன் நேராக நித்ராவின் முன்பு போய் நின்று “உங்களை சார் எத்தனை முறை கூப்பிடறாங்க. நான் வந்து சொல்லிட்டு போன பிறகும் நீங்க போகலையே. சார் என்னைக் கூப்பிட்டு திட்டுறாங்க .உங்களுக்கு வேலை கொடுத்திருந்தாங்களாம்ல அதெல்லாம் முடிச்சிருந்தா அந்த பைலை எல்லாம் எடுத்துட்டு போகணுமாம் சார் சொல்ல சொன்னாங்க” என்று மட்டும் சொன்னவன் பாவமாக நடந்து சென்றான்.

“அச்சோ நம்ம போகலன்னதும் பாவம் ப்யூன் அண்ணாவைக் கடிச்சு வைச்சுட்டானோ? இவனையெல்லாம் என்ன செய்யன்னுத் தெரியலை” என்று எழுந்து வேகமாக அவனது அறைக்குள் செல்லப்போனவள் சட்டென்று நின்று நிதானமாக கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தாள்.

எஸ் கம்மின் என்ற அவனது அந்தக் கம்பீரக்குரலைக் கேட்டதும் அப்படியே மனது அவன் பால் விழத்தான் செய்தது.

‘வேண்டாம்டி லூசே!மனசை அடக்கு அடக்கு’ என்று சொல்லிச் சொல்லி அடக்கிக்கொண்டே உள்ளே சென்றவள் மொத்தமாக ஆயுஷின் கரத்திற்குள் அடங்கி நின்றிருந்தாள்.

இது எப்போ நடந்துச்சு? என்று அவள் அதிர்ந்து யோசித்து நிற்பதற்குள் அவளது இதழ்கள் ஆயுஷினால் களவாடப்பட்டது.

நித்ரா எப்போதடா உள்ளே வருவாள் என்று காத்திருந்தவன் அவள் உள்ளே நுழையவும் கதவின் அருகிலே நின்றிருந்து அப்படியே தூக்கித் தனது கைகளுக்குள் வைத்து அணைத்துக்கொண்டான்.

நித்ரா அதிர்ந்துப் பார்த்தும் அந்த பார்வையில் மொத்தமாக விழுந்தவன் அவளது கண்களைப் பார்த்தவாறே அவளது உதட்டை அப்படியே தனது உதட்டால் தொட்டவன், சட்டென்று பற்களால் அவளது கீழுதட்டைக் கடித்துப்பிடித்து தனது இரு பற்களுக்கும் இடையில் வைத்து லேசாக அழுத்திப்பிடித்தான்.

ஷ்ஷ்அஆஆஆஆஆ என்று சத்தமிட்டாலும் அது அவனது வாயிற்குள்தான் சென்றது.

அவனது நெஞ்சில் கைவைத்து அழுத்தித் தன்னிடமிருந்து விலக்கித் தள்ளியவள் அவனிடமிருந்து முற்றிலும் விலகிவிட முயன்றாள்.

ஆனால் ஆயுஷோ அவளது இடையில் கைக்கொடுத்து அப்படியே தன் இடுப்போடு சேர்த்துப் பிடித்தவன் அப்படியே அவளின் முதுகில் கைவைத்து அவள் விலகாது பார்த்துக்கொண்டான்.

நித்ராவுக்கு அவன் கொடுக்கும் முத்தம் மூளைக்குள் ஏறி மொத்தத்தையும் மறக்கச் செய்திருந்தது. அதனால் தன்னையறியாது இப்போது கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் கண்களை முடிக்கொள்ளவும் இன்னும் இன்னும் தன்னோடு அவளை சேர்த்து அணைத்தவன் இதழில் இருந்து உதட்டை விலக்கியவன் அவளது கண்களில் முத்தம் வைத்தான்.

அந்த முத்தத்தில் தனது இமைகளை பட்டாம்பூச்சியின் சிறகைப்போல வேகமாக திறந்து அவனைப் பார்த்த்தாள்.

“ஏன் எனக்கு முத்தம் கொடுக்குறீங்க? நானே உங்கப் பார்வையில் அக்லி சாக்லேட்.மிடில் கிளாஸ் பேமிலியில் இருந்து வந்த லோக்கல்.நீங்க எதுக்கு எனக்கு முத்தம் தர்றீங்க.அது உங்க ஸ்டேட்டஸுக்கு ஒத்துவாரதே!” என்று கேட்டாள்.

நித்ரா பேசியது அவனுக்கு நன்றாக கேட்டிருந்தும் அதை கேட்டுக் கொள்ளாதவன்போல வேகமாகப் பேசும் அவளது உதடுகளை தனது விரல் கொண்டு அழகாக தடவி கொடுத்து மெதுவாக பிடித்து இழுத்து மீண்டும் அவனது வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்கத் தொடங்கினான்.

முதலில் கொடுத்த முத்தத்தில் இருந்த அவசரம் இப்பொழுது இல்லை.ஆயுஷ் நிதானமாக மிகவும் பொறுமையாக அவளது கீழுதட்டைத் தனது பற்கள் கொண்டு கடித்து இழுத்து மீண்டுமாக வாயிற்க்குள் வைத்து அதற்கு சுவைக்க ஆரம்பித்தான்.

அந்த முத்தச்சுவை அவள் தந்த முத்தத்திற்கு ஈடாகாது என்று புரிந்தவன் மெதுமெதுவாக ரசித்து ருசித்து அவளின் இதழில் தன்னைத் தொலைக்கத் தொடங்கினான்!